மீண்டும் ஒரு சூப்பர்ஹீரோ சங்கமம்: மார்வெலின் ‘தண்டர்போல்ட்ஸ்’ ட்ரெய்லர் எப்படி? 

By செய்திப்பிரிவு

சென்னை: மார்வெல் நிறுவனத்தின் ‘தண்டர்போல்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 36வது படமாக உருவாகியுள்ளது ‘தண்டர்போல்ட்ஸ்’. ஜேக் ஷ்ரீயர் இயக்கியுள்ள இப்படத்தில் டேவிட் ஹார்பர், ஹன்னா ஜான்-கமென், ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ், செபாஸ்டியன் ஸ்டான், வியாட் ரஸ்ஸல், ஜெரால்டின் விஸ்வநாதன், லூயிஸ் புல்மேன், ஓல்கா குரிலென்கோ மற்றும் புளோரன்ஸ் பக் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - இப்படத்தில் வரும் பல சூப்பர்ஹீரோ கேரக்டர்கள் தனித்தனியாக முந்தைய மார்வெல் படங்களில் இடம்பெற்றிருந்தாலும் அவை பெரியளவில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்லை. எனினும் இந்த கதாபாத்திரங்கள் காமிக்ஸ்களாக பெரும் வரவேற்பை பெற்றவை. கேப்டன் அமெரிக்காவின் நண்பராக வரும் பக்கி பார்ன்ஸ் (எ) வின்டர் சோல்ஜர், பிளாக் விடாவின் தங்கை யெலெனா பெலோவா, அவரின் தந்தை ரெட் கார்டியன் ஆகிய பரிச்சயமான கதாபாத்திரங்களை தவிர மேலும் சில சூப்பர்ஹீரோக்களும் ட்ரெய்லரில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்துக்கு முன்னதாக மற்றொரு சூப்பர்ஹீரோ கூட்டத்தை உருவாக்கும் மார்வெலின் முயற்சியே இந்த படம் என்று தெரிகிறது.

வழக்கமான மார்வெல் படங்களைப் போலவே ட்ரெய்லரில் அதிரடி ஆக்சனுக்கு குறைவில்லை. கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும் ரசிக்கும்படி உள்ளன. எனினும் சூப்பர்ஹீரோ படங்கள் அண்மைக்காலமாக ரசிகர்கள் மத்தியில் ஒருவித சலிப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் நல்ல திரைக்கதை மட்டுமே இதனை வெற்றிப்படமாக்கும் என்பது உறுதி. ‘தண்டர்போல்ட்ஸ்’ ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE