பெயர், குரலை பயன்படுத்தி மோசடி: ஹாலிவுட் நடிகர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், ‘பாரஸ்ட் கம்ப்’ படத்துக்காக, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர். தி கிரீன் மைல், தி டெர்மினல், தி டாவின்ஸி கோடு உட்பட பல படங்களில் நடித்துள் ளார். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் தனது புகைப்படம் மற்றும் குரலைப் பயன்படுத்தி சிலர் விளம்பரம் செய்துவருவதாகவும் ரசிகர்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி மேலும் அவர், “இணையத்தில் எனது பெயரையும் குரலையும் தவறாகப் பயன்படுத்தி அதிசய சிகிச்சைகள், அற்புதமான மருந்துகள் என்று தவறாகக் கூறி சிலர் விளம்பரம் செய்து வருகின்றனர். இவை எனது அனுமதியின்றி மோசடியாக உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இதுபோன்ற மோசடிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். உழைத்துச் சம்பாதித்த பணத்தை இழந்துவிடாதீர்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்