‘முஃபாஸா: தி லயன் கிங்’ படத்துக்கு மகன்களுடன் டப்பிங் கொடுக்கும் ஷாருக் கான்

By செய்திப்பிரிவு

மும்பை: ‘முஃபாஸா: தி லயன் கிங்’ படத்தின் இந்தி டப்பிங்குக்கு நடிகர் ஷாருக்கான் தனது இரு மகன்களுடன் டப்பிங் கொடுத்துள்ளார்.

வால்ட் டிஸ்னியின் புகழ்பெற்ற கார்ட்டூனான ‘தி லயன் கிங்’ அனிமேஷன் படம் மீண்டும் லைவ் ஆக்‌ஷனின் உருவாக்கப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. அந்த படம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை டிஸ்னி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

‘முஃபாஸா: தி லயன் கிங்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் முதல் பாகத்தில் இறந்து போனதாக காட்டப்பட்ட முஃபாஸா சிங்கத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனை பேர்ரி ஜெர்க்கின்ஸ் இயக்கியுள்ளார்,

அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இப்படம் வரும் டிசம்பரில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

முதல் பாகத்தின் டப்பிங்குக்காக அந்தந்த மொழிகளில் இருக்கும் பிரபலமான நடிகர்களை படக்குழு பயன்படுத்தியிருந்தது. அதன்படி இந்தியில் ஷாருக்கானும், அவரது மகன் ஆர்யன் கானும் டப்பிங் செய்திருந்தனர். அதே போல தமிழில் அரவிந்த்சாமி மற்றும் சித்தார்த் குரல் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது ‘முஃபாஸா: தி லயன் கிங்’ படத்தின் இந்தி பதிப்புக்கு மீண்டும் நடிகர் ஷாருக்கான் டப்பிங் செய்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து அவரது மகன்களான ஆர்யன் கான் மற்றும் ஆப்ரம் கான் இருவரும் டப்பிங் கொடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்