‘தி ஷைனிங்’ பட நடிகை ஷெல்லி டுவால் காலமானார்

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘தி ஷைனிங்’, ‘ஆனி ஹால்’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை ஷெல்லி டுவால் காலமானார். அவருக்கு வயது 75.

ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான படம் ‘தி ஷைனிங்’. சைக்கோ த்ரில்லர் படங்களுக்கு இன்றுவரை முன்னோடியாக திகழும் இப்படத்தில் ஜாக் நிக்கல்ஸனுடன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷெல்லி டுவால்.

அதற்கு முன்பே 1977ல் வெளியான ‘3 உமன்’ திரைப்படம் அவருக்கு பெரும் புகழை கொண்டு வந்து சேர்த்தது. இப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான கேன்ஸ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அவருக்கு கிடைத்தன. இதுதவிர பிரிட்டிஷ் அகாடமி விருதுகள், பிரைம் டைம் எம்மி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு ஷெல்லி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

‘நாஷ்வில்’ உள்ளிட்ட படங்களும் ஷெல்லியின் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. ’ஆனி ஹால்’ படத்தில் கேமியோ ரோல் மட்டுமே செய்திருந்தாலும் அந்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இறுதியாக 2023ல் வெளியான ’தி ஃபாரஸ்ட் ஹில்’ என்ற படத்தில் நடித்திருந்தார் ஷெல்லி.

கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஷெல்லி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ப்ளான்கோ நகரில் உள்ள அவரது வீட்டில் தூக்கத்திலேயே உயிரிழந்தார். இதனை அவரது கணவர் டான் கில்ராய் ஊடகங்களிடம் உறுதி செய்தார்.

ஷெல்லியின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்