வாஷிங்டன்: அனிமேஷன் சேனலான கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுவதாக வெளியான தகவல்களுக்கு சேனல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அனிமேஷன் தொழிலாளர்களின் குழு சார்பில் ‘Animation Workers Ignited’ என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் கணக்கு ஒன்று இயக்கி வருகிறது. அதில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கார்ட்டூன் நெட்வொர்க் நிறுத்தப்படுகிறதா? அனிமேஷன் துறை என்ன மாதிரியான ஆபத்தை சந்தித்து வருகிறது என்பதை வெளிப்படுத்துங்கள். #RIPCartoonNetwork” என்ற ஹேஷ்டேக்கின் வழியே உங்களுக்கு பிடித்தமான கார்ட்டூனை பதிவிடுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. 80ஸ், 90ஸ் கிட்ஸ்கள் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் உடனான தங்களது நினைவுகளை சோகத்துடன் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தகவலுக்கு கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறது என்று வரும் தகவல்களில் உண்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பல நிகழ்ச்சிகளுடன், உலகெங்கிலும் உள்ள எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் புதுமையான உள்ளடக்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
» “என்னை இந்த அரசு திட்டமிட்டு கொல்லப் பார்க்கிறது” - சாட்டை துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
» கடும் முதுகுவலி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் அனுமதி
அண்மையில் ‘Adventure Time’, ‘Foster’s Home for Imaginary Friends’ உள்ளிட்ட பல்வேறு அனிமேஷன் தொடர்கள் குறித்த அறிவிப்புகளை கார்ட்டூன் நெட்வொர்க் நிர்வாகம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago