நியூயார்க்: மார்வெல் - சோனி நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வெனம்’ மூன்றாம் பாகமான ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஸ்பைடர் மேன் காமிக்ஸ்களின் மிக பிரபலமான வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான ‘வெனம்’ கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘வெனம்’ படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் சிம்பியாட் எனப்படும் ஏலியன்களில் ஒன்றான வெனம், பத்திரிகை புகைப்படக் கலைஞராக இருக்கும் நாயகனின் உடலில் புகுந்து கொள்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து ’வெனம் 2’ கடந்த 2021ல் வெளியானது. இந்த நிலையில் இப்படவரிசையின் மூன்றாம் மற்றும் இறுதிபாகமாக ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ உருவாகியுள்ளது. டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ட்ரெய்லரில் வெனமின் சொந்த கிரகத்தில் இருந்து வெளிப்படும் ஒரு பயங்கர வில்லன் ஏலியனுடன் வெனம் மோதுவதாக காட்டப்படுகிறது. தொடக்கம் முதல் இறுதி வரை வெறும் ஆக்ஷன், ஆக்ஷன் மட்டுமே. அந்த அளவுக்கு முந்தைய பாகங்களை விஞ்சும் அளவுக்கான ஆக்ஷன் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறும் என்று நம்பலாம். குறிப்பாக ட்ரெய்லரின் இறுதியில் ஒரு குதிரையின் உடலில் வெனம் புகுந்து கொள்ளும் காட்சியில் அரங்கம் அதிர்வது உறுதி. ’வெனம்’ படவரிசையில் இதுவே கடைசி என்று சொல்லப்படும் நிலையில், இப்படத்துக்கான எதிர்பார்ப்பை ட்ரெய்லர் எகிறச் செய்துள்ளது. ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ ட்ரெய்லர் வீடியோ:
» “பேசி தீர்க்கப்பட்டுவிட்டது” - ரெட்கார்டு விவகாரம் குறித்து நடிகர் சிம்பு விளக்கம்
» “மூன்றாவது குழந்தை...” - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சிப் பகிர்வு
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago