சர்ச்சையில் சிக்கியது டொனால்ட் ட்ரம்ப் பயோபிக்

By செய்திப்பிரிவு

கேன்ஸ்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்க்கை கதை ‘தி அப்ரென்டிஸ்’ (The Apprentice) என்ற பெயரில் திரைப்படமாகி இருக்கிறது. அலி அப்பாஸி இயக்கியுள்ள இதில் ட்ரம்பாக, செபாஸ்டியன் ஸ்டான் நடித்துள்ளார். இவானா ட்ரம்பாக மரிய பகலோவா உட்பட பலர் நடித்துள்ளனர். 1970 மற்றும் 80-களில் டிரம்பின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

படத்தைப் பார்த்தவர்கள் எழுந்து நின்று 8 நிமிடம் கைதட்டி பாராட்டினர். இருந்தாலும் இந்தப் படத்தின் ஒரு காட்சி பரபரப்பைஏற்படுத்தி இருக்கிறது. அதில், தன்னை அவதூறாகப் பேசும் இவானாவிடம் அவர் தவறாக நடந்துகொள்வதாக ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. நிஜ வாழ்க்கையிலும் விவாகரத்து நடவடிக்கைகளின் போது, இவானா அந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். பின்னர் அதைத் திரும்ப பெற்றார்.

அமெரிக்காவில் தேர்தல் வர இருக்கும் நிலையில், ட்ரம்பை அவதூறாகச் சித்தரிக்கும் நோக்கிலும் அவரை மோசமாகக் காட்டுவதற்காகவும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்துக்கு எதிராக ட்ரம்ப் தரப்பில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்