ஹாலிவுட்டில் உருவாகும் ‘டூன்’ தொடரில் தபு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்தி நடிகை தபு, தமிழில், காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியில் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான ‘க்ரூ’ வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர் ஹாலிவுட்டில் உருவாகும் ‘டூன்: புரோபெசி’ (Dune: Prophecy) என்ற அறிவியல் புனைகதை தொலைக்காட்சி தொடரில்நடிக்கிறார்.

டெனிஸ் வெல்லுனவ் இயக்கத்தில் வெளியான ‘டூன்: பார்ட் 2’ படத்தின் முன் கதையாக, இந்த ‘டூன்: புரோபெசி’ உருவாகிறது. மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்த்து போராடும் இரண்டு சகோதரிகளைப் பற்றிய கதையில் சிஸ்டர் பிரான்செஸ்கா என்ற பாத்திரத்தில் தபு நடிக்கிறார். எமிலி வாட்சன், ஒலிவியா வில்லியம்ஸ், டிராவிஸ் ஃபிம்மல், ஜோதி மே, மார்க் ஸ்ட்ராங், சாரா-சோஃபி பௌஸ்னினா, ஜோஷ் ஹூஸ்டன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் நடிக்கும் தபுவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE