லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ் கன் இயக்கி வரும் புதிய சூப்பர்மேன் படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை டிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் சூப்பர்மேன். இதனை அடிப்படையாகக் கொண்டு 70-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் நடித்திருந்தார்.
தற்போது டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்ததால் ஹென்றி கெவில் டிசி படங்களில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் மார்வெல் நிறுனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தற்போது டிசி நிறுவனத்துக்காக பணியாற்றி வருகிறார்.
அடுத்த வெளியாகவுள்ள புதிய சூப்பர்மேன் படத்தை இயக்கிவருகிறார். இதில் சூப்பர்மேனாக டேவிட் கோரன்ஸ்வெட் நடிக்கிறார் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய சூப்பர்மேனின் கதாபாத்திர லுக்கை டிசி நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
நாயகன் டேவிட் கோரன்ஸ்வெட் தனது சூப்பர்மேன் ஆடையை அணிந்துகொண்டு புறப்பட தயாராவது போல அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago