எடி மர்பி பட ஷூட்டிங்கில் விபத்து: படக்குழுவினர் படுகாயம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகர், எடி மர்பி. இவர், 48 ஹவர்ஸ், பிரேவரி ஹில்ஸ் காப், தி நட்டி புரொபஸர், கம்மிங் டு அமெரிக்கா, ட்ரீம் கேர்ள்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது நடித்து வரும் படம், 'தி பிக்கப்'. டிம் ஸ்டோரி இயக்கும் இந்தப் படத்தில் கேகே பால்மர், பீட் டேவிட்சன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு அட்லாண்டாவில் நடந்து வந்தது. காரும் லாரியும் மோதும் காட்சியை படமாக்கினர். ஒத்திகைக்குப் பிறகு படமாக்கப்பட்டபோது, இரண்டும் திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிலர் படு காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவுஏற்பட்டது. படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடந்தபோது, எடி மர்பி, கேகே பால்மர், பீட் டேவிட்சன் உட்பட நடிகர்கள் அங்கு இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE