சிறந்த படம் ‘ஒப்பன்ஹெய்மர்’, சிறந்த நடிகை எம்மா ஸ்டோன்: ஆஸ்கர் 2024 முழு பட்டியல்

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் ஏழு விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்‌ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்‌ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்:

சிறந்த படம்: ஒப்பன்ஹெய்மர்
சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
சிறந்த உறுதுணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த உறுதுணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்
சிறந்த தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்‌ஷன்
சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த ஒளிப்பதிவு: ஒப்பன்ஹெய்மர்
சிறந்த ஆடை வடிவமைப்பு: புவர் திங்க்ஸ்
சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல்
சிறந்த ஆவணக் குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
சிறந்த எடிட்டிங்: ஒபன்ஹெய்மர்
சிறந்த சர்வதேச திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: புவர் திங்ஸ்
சிறந்த ஒரிஜினல் இசை: ஓபன்ஹெய்மர்
சிறந்த ஒரிஜினல் பாடல்: வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ்
சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்
சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
சிறந்த ஒலி: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்

ஏழு விருதுகளை வென்ற ‘ஒப்பன்ஹெய்மர்’ - கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘ஒப்பன்ஹெய்மர்’. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு உருவான இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருந்தார்.

‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ரூ.820 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.8 ஆயிரம் கோடியை வசூலித்தது. ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் ஐந்து விருதுகளை வென்று ‘ஒப்பன்ஹெய்மர்’ ஆதிக்கம் செலுத்தியது. இதனையடுத்து ஆஸ்கர் விருதுகளில் அதிக விருதுகளை ‘ஒப்பன்ஹெய்மர்’ வெல்லும் என்று கணிக்கப்பட்டது.

வாசிக்க > Oppenheimer Review: மனிதகுல தலைகுனிவின் வரலாற்று ஆவணம்

இந்த நிலையில், இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்