டாம் குரூஸின் மிஷன் இம்பாஸிபிள் ட்ரெய்லர்: சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு

By செய்திப்பிரிவு

நீண்ட எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'மிஷன் இம்பாசிபிள்' ஹாலிவுட் திரைப்படத்தின்  ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

டாம் குரூஸ் அதிரடி நாயகனாக நடித்து வெளியான 'மிஷன் இம்பாசிபிள்' 2015 வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகம் 'மிஷன் இம்பாசிபிள் - ஃபால்அவுட்' இந்த ஆண்டு ஜூலையில் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. இப்படத்திற்கான ட்ரெய்லர் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்போடு பகிரப்பட்டு வருகிறது.

இப்படத்தில் டாம் குரூஸுடன் ரெபெக்கா ஃபெர்குசன், சைமன் பெக், விங் ரெம்ஸ், மிச்செல்லா மோனகன், அலெக் பால்டுவின், சீன் ஹாரீஸ், ஹென்ரி கேவில், வானெஸ்கா கிர்பி, சீயான் ப்ரூக், ஆன்ஜெலா பசெட் ஆகியோரும் நடித்துள்ளனர். ராப் ஹார்டி ஒளிப்பதிவு செய்ய கிறிஸ்டோபர் மாக்வாரி இயக்கியுள்ளார்.

முதன்முதலில் மிஷன் இம்பாசிபிள் 1996ல் வெளியானது. அதன்பிறகு, அதன் இரண்டாம் பாகம் (2000) மூன்றாம் பாகமும் (2006) வெளியானது. அவற்றைத் தொடர்ந்து 'மிஷன் இம்பாசிபிள் கோஸ்ட் புரொட்டக்கால்' 2011லும். 'மிஷன் இம்பாசிபிள் ரோக் நேஷன்' 2015லும் வெளியானது. 'மிஷன் இம்பாசிபிள் சீரியஸை' தொடர்ந்து தயாரித்து வருவதோடு அவற்றின் நாயகனாகவும் டாம் குரூஸ் நடித்து வருகிறார்.

2015ல் வெளியான மிஷன் இம்பாசிபிள் உலகம் முழுவதும் வெளியாகி 682.7 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. 'மிஷன் இம்பாஸிபிள் பால்அவுட்' ஜூலை 27, 2018 அன்று வெளியாகிறது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்