சென்னையில் முதன்முறையாக காமிக் கான் நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: மார்வல், டிசி, டிஸ்னி , நரூட்டோ என்ற அனிமி உட்பட பல்வேறு காமிக் கதாபாத்திரங்கள் உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளன.

இந்நிலையில் இந்த காமிக்ஸ் ரசிகர்களுக்காக, சென்னையில் முதன்முறையாக 'காமிக் கான்' நிகழ்வுநடத்தப்படுகிறது. கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அடிப்படையிலான தொடர் நிகழ்ச்சியான இது, சர்வதேச அளவில் பிரபலமானது. 'காமிக் கான் இந்தியா' அமைப்பு நடத்தும் இந்நிகழ்வு இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் எற்கெனவே நடைபெற்றுள்ளன. இப்போது முதன்முறையாக சென்னையில் நடைபெறுகிறது. வரும் 17, 18 -ம் தேதிகளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் சர்வதேச காமிக் ஓவியர்களான 'பேரண்ட்' மற்றும் 'ஜான் லேமேன்' ஆகியோரின் படைப்புகள் காட்சிப்படுத்த இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் நரூட்டோ அனிமிக்கு குரல் கொடுத்த கலைஞர்களும் இதில் பங்குபெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துக்கொள்கிறார். அவர் டிசி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்