'ப்ளாக் பேந்தர்' திரைப்படம் அமெரிக்காவில் வெளியான மூன்று நாட்களில் மட்டும் 192 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
டிஸ்னி மற்றும் மார்வல் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'ப்ளாக் பேந்தர்'. மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் நீண்ட திரைப்பட வரிசையில் ப்ளாக் பேந்தரும் இடம்பெறுகிறது. ஏற்கனவே 'கேப்டன் அமெரிக்கா சிவில் வார்' திரைப்படத்தில் இந்த கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்தக் கதாபாத்திரத்துக்கென தனி படமாக உருவாகியுள்ளது.
கருப்பின நடிகர்கள், அவர்களது கலாச்சாரம், தற்போது நிலவும் கருப்பின அரசியல் என அமெரிக்க சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களின் பிரதிபலிப்பாகவே இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாரு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு சாதனைகள்
இந்த வசூலின் மூலம் இப்படம் பல உள்நாட்டு (அமெரிக்கா) வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது.
மார்வல் சினிமாட்டிக் உலகில் வெளியாகும் பதினெட்டாவது படம் 'ப்ளாக் பேந்தர்'. இதில் ப்ளாக் பேந்தரோடு சேர்த்து ஒன்பது படங்கள் முதல் 3 நாட்களில் 100 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. மேலும் மார்வல் சினிமாட்டிக் உலகில் வெளியான படங்களில் அதிக 3 நாள் வசூல் என்ற பட்டியலில் ’அவெஞ்சர்ஸ்’ முதலிடத்திலும் (207.4 மில்லியன்) 'ப்ளாக் பேந்தர்', ’அவெஞ்சர்ஸ் 2’ஐ முந்தி, இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்த 192 மில்லியன் டாலர் வசூல், அதிகபட்ச 3 நாள் வசூல் என்ற பட்டியலில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் இந்த வார இறுதியோடு திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால், 4 நாள் விடுமுறையில் மொத்தம் 218 மில்லியன் டாலர்கள் வசூலாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 3 நாள் வசூல், இதுவரை பிப்ரவரி மாதம் வெளியான படங்களிலேயே அதிகமானதாகும்.
சர்வதேச அளவில் 169 மில்லியன் டாலர்களை 'ப்ளாக் பேந்தர்' வசூலித்துள்ளது. இத்தனைக்கும் சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படம் இனிமேல் தான் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago