ஸ்பைடர்மேனாக மீண்டும் நடிக்க டாம் ஹாலண்ட் நிபந்தனை

By செய்திப்பிரிவு

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட். அன்சார்டட், டெவில் ஆல் த டைம், தி இம்பாசிபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், ஸ்பைடர்மேன் வரிசை படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இவருக்கும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கதாபாத்திரம் நியாயமாக இருந்தால் மட்டுமே ஸ்பைடர்மேனாக மீண்டும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஸ்பைடர் மேன் படத்தில் மீண்டும் நடிக்கவில்லை என்றால் நான் முட்டாளாகத்தான் இருப்பேன். நான் ஸ்பைடர்மேனின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன். ஆனால், அடுத்த பாகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அதில் நடிக்க மாட்டேன். என் கதாபாத்திரத்துக்கான நியாயம் அதில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நடிப்பேன். என் கதாபாத்திரம் எப்படி இருக்கலாம் என்பதற்கான உரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். ஸ்பைடர்மேனாக நடிக்கும்போது பாதுகாப்பாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்