‘ஃப்ரெண்ட்ஸ்’ படப்பிடிப்பு நடந்த இடம் அருகே மேத்யூ பெர்ரி உடல் நல்லடக்கம்

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நடிகர் மேத்யூ பெர்ரியின் உடல், அவர் நடித்து பிரபலமான ‘ஃப்ரெண்ட்ஸ்’ தொடரின் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

1994 முதல் 2004 வரை ஒளிபரப்பான அமெரிக்க டிவி தொடர் ‘ஃப்ரெண்ட்ஸ்’. இந்தத் தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. மொத்தம் 10 சீசன்கள், 236 எபிசோட்களைக் கொண்ட இந்தத் தொடரில் சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மேத்யூ பெர்ரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு கலிபோர்னியாவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில், பாத் டப்பில் மேத்யூ பெர்ரி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக கூறப்படுகிறது. மேத்யூவின் மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள ‘ஃப்ரெண்ட்ஸ்’ தொடரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மேத்யூவின் உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஃபாரஸ்ட் லான் மெமரியல் பார்க் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் ‘ஃப்ரெண்ட்ஸ்’ தொடரில் நடித்த ஜெனிஃபர் அனிட்ஸன், கோர்ட்டனி கோக்ஸ், லிசா குட்ரோ, டேவின் ஸ்விம்மர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேத்யூ உடல் அடக்கம் செய்யப்பட்ட மயானத்துக்கு எதிரே உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில்தான் ‘ஃப்ரெண்ட்ஸ்’ தொடரின் படப்பிடிப்பு 10 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இதனைக் குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்