ஹாலிவுட் ஸ்டிரைக் காரணமாக டாம் குரூஸ் பட ரிலீஸ் தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களின் பட்டியலில் டாம் குரூஸின்‘ மிஷன்: இம்பாசிபிள்’ வரிசை படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. இந்த ஸ்பை ஆக்‌ஷன் படங்கள் உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனைப் படைத்துள்ளன. அந்த வகையில் கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் 7-ம் வரிசை, 2 பாகங்களாக உருவாகியுள்ளது. ‘மிஷன்: இம்பாசிபிள் -டெட் ரெகனிங் பாகம் 1’ கடந்த ஜூலை மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை வியக்க வைத்தன.

‘மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெகனிங் பாகம் 2’ என்ற இதன் 2ம் பாகத்தை அடுத்த வருடம் ஜூன் 28ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஹாலிவுட் ஸ்டிரைக் காரணமாக இதன் வேலைகள் முடியாததால், 2025-ம் வருடத்துக்கு இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்