பேச்சுவார்த்தை தோல்வி: தொடர்ந்து நீடிக்கும் ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் நடிகர்கள் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சம்பளப் பற்றாக்குறை, ஏஐ அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக ‘ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பு கடந்த மே மாத தொடக்கம் முதல் போராடி வந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து ஹாலிவுட் நடிகர்களும் தங்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். கடந்த மாதம் ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் உடனான தயாரிப்பு நிறுவனங்களின் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டதாக ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த போராட்டம் கைவிடப்பட்டது.

இதே போல நடிகர்களுடனான பேச்சுவார்த்தையிலும் தயாரிப்பு நிறுவனங்கள் சமீபத்தில் ஈடுபட்டன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உரிய தீர்வுகள் எட்டப்படவில்லை. இதனால் மூன்று மாதங்களாக நீடித்து வரும் போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர்களுடன் இனி பேச்சுவார்த்தையை தொடர்ப் போவதில்லை என்று ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரீமிங் படைப்புகளுக்கான ஊதிய உயர்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தங்கள் படங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹாலிவுட் நடிகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்