‘தி ஐ’ எனக்கு ஸ்பெஷல்: ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

நடிகை ஸ்ருதிஹாசன் இப்போது ‘சலார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே அவர் ‘தி ஐ’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். இதில், ஸ்ருதியுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ படத்தில் நடித்த மார்க் ரோலே நடித்துள்ளார். கடந்த 1980-ம் ஆண்டில் நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண், கணவன் இறப்புக்குப் பின் அவர் சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்குச் செல்கிறார். அப்போது ஏற்படும் உளவியல் சார்ந்த திருப்பங்களும் சம்பவங்களும்தான் கதை. இதில் நடிகைகள் அன்னா சவ்வா, லிண்டோ மார்லோ உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள ஸ்ருதி ஹாசன், இது எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். டாப்னி ஸமான் (Daphne Schmon) இயக்கிய இந்தப் படம் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லண்டன் சுயாதீன திரைப்பட விழாவில் சிறந்தப் படத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

16 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்