பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன். குழந்தை நட்சத்திரமாக ‘ஹாரிபாட்டர்’ படத்தில் அறிமுகமானவர் இவர். தொடர்ந்து, ஹாரிபாட்டர் வரிசை படங்களில் நடித்து வந்த இவர், பிறகு மற்றப் படங்களிலும் நடிக்கத் தொடங்கி பிரபலமானார். திஸ் இஸ் எண்ட், நோவா, ரெக்ரஷன், தி சர்கிள் உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான ‘லிட்டில் வுமன்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில், 33 வயதாகும் எம்மா வாட்சன், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ படிப்பில், பகுதி நேரமாகச் சேர்ந்துள்ளார். அவருக்கு, வகுப்புகள் இருக்கும்போது, பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே, இளங்கலை ஆங்கில இலக்கியத்தை 2014-ம் ஆண்டு பிரவுன் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
46 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago