ஜங்கிள் புக் பாணியில் மீண்டும் உருவாகிறது லயன் கிங்: 2019-ல் வெளியாகும் என அறிவிப்பு

By ஆலன் ஸ்மித்தீ

டிஸ்னியின் 'லயன் கிங்' படம் மீண்டும் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படமாக உருவாகிறது. படம் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஸ்னி நிறுவனத்தின் புகழ்பெற்ற அனிமேஷன் படங்களில் ஒன்று 'லயன் கிங்'. ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லெட்' கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் 1994-ம் ஆண்டு வெளியாகி சர்வதேச அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் பல வசூல் சாதனைகளையும் படைத்தது.

டிஸ்னியின் புகழ்பெற்ற அனிமேஷன் படங்கள் பல, சமீப காலங்களில் லைவ் ஆக்‌ஷன் படங்களாக ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 'ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்', 'சிண்ட்ரெல்லா', 'தி ஜங்கிள் புக்', 'பியூட்டி அண்ட் தி பீஸ்ட்' உள்ளிட்ட படங்களின் நவீன ரீமேக் வடிவங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது 'லயன் கிங்' படமும் லைவ் ஆக்‌ஷன் படமாக ரீமேக் செய்யப்படவுள்ளது.

'ஐயர்ன் மேன்' 1, 2, 'செஃப்', 'தி ஜங்கிள் புக்' (2016) உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் ஃபேவ்ரூ, 'லயன் கிங்' ரீமேக்கை இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்பாவின் குரலாக டொனால்ட் க்ளோவர், முதல் லயன் கிங் படத்தில் முஃபாஸா கதாபாத்திரத்துக்கு குரல் தந்த ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், சிம்பாவின் ஜோடி நாலாவின் குரலாக பாடகி பியோன்ஸே உள்ளிட்டோர் படத்தில் பங்காற்றவுள்ளனர்.

'தி ஜங்கிள் புக்' பாணியிலேயே 3டி கிராஃபிக்ஸ் கதாபாத்திரங்களுடன் 'லயன் கிங் 2019' உருவாகிறது. ஜங்கிள் புக்கை விட மேம்பட்ட கிராஃபிக்ஸ் படத்தில் இருக்கும் என்று இயக்குநர் ஜான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்