கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'தோர்: ராக்னராக்' படம் 121 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதல் 3 நாட்களில் வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட ரூ 782.6 கோடி ஆகும்.
டிஸ்னி மற்றும் மார்வல் நிறுவனங்கள் இணைந்து சூப்பர் ஹீரோ படங்களைத் தயாரித்து வருகின்றன. ஒரு படத்தை இன்னொரு படம் மிஞ்சும் வகையில் அவை ரசிகர்களை ஈர்த்துள்ளன. வசூலிலும் சாதனைகள் படைத்துள்ளன. அந்த வரிசையில், 'தோர்' படத்தின் 3வது பாகம், 'ராக்னராக்', கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
விமர்சனங்களின் பாராட்டு மழையில் நனைந்துள்ளதாலும், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்ததாலும், மந்தமாக இருந்த அமெரிக்க பாக்ஸ் ஆபிஸை தோர் படத்தின் வசூல் சுறுசுறுப்பாக்கியுள்ளது. தோர் படத்துக்கு அடுத்த இடத்தில் 'எ பாட் மாம்’ஸ் க்றிஸ்மஸ்' படம் 20 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது.
தோரின் இந்த வசூல், மார்வல் சினிமா உலகம் என்று சொல்லப்படும் பட வரிசையில் 7வது மிகப்பெரிய 3 நாள் வசூலாகும். முன்னதாக இந்த வருடம், மார்வலின் 'ஸ்பைடர்மேன்: ஹோம்கமிங்' திரைப்படம் 117 மில்லியன் டாலர்களை 3 நாட்களில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தோர் படத்தின் மொத்த வசூல் 350 மில்லியன் டாலர்களை நெருங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் படம் இதுவரை 427 மில்லியன் டாலர்களை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் 3 நாட்களில் 55.6 மில்லியன் டாலர்களையும் (ரூ.359.6 கோடி) இந்தியாவில் 5.2 மில்லியன் டாலர்களையும் (ரூ.33.6 கோடி) தோர் வசூலித்துள்ளது. இதுவரை நவம்பர் மாதம் வெளியான படங்களில் இது அதிக வசூலாகும்.
மார்வல் சினிமா உலகில் 17வது படம் 'தோர்: ராக்னராக்'. இந்த வசூலின் மூலம், மொத்த மார்வல் படங்களின் வசூல் சர்வதேச அளவில் 13 பில்லியன் டாலர்களையும், அமெரிக்காவில் மட்டும் 5 பில்லியன் டாலர்களையும் எட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago