கிறிஸ்டோஃபர் நோலனின் ‘Oppenheimer’ முதல்நாளில் இந்தியாவில் ரூ.13 கோடி வசூல்

By செய்திப்பிரிவு

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘Oppenheimer’ திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.13 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய ‘மெமன்டோ’, ‘ தி ப்ரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. திரைக்கதை அமைப்பில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தவர் நோலன். கடைசியாக கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனெட்’ திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது நோலன் இயக்கியுள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ (‘Oppenheimer’) படம், இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரைப் பற்றி பேசுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ( ஜூலை 21) திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ.13 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியான டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் ஒன்’ படம் முதல் நாள் இந்தியாவில் ரூ.12.5 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.> விமர்சனத்தை வாசிக்க: Oppenheimer Review: மனிதகுல தலைகுனிவின் வரலாற்று ஆவணம்... சரி, நோலன் ரசிகர்களுக்கு?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்