பாரிஸ்: சார்லி சாப்ளினின் மகளும் நடிகையுமான ஜோசஃபின் சாப்ளின் கடந்த ஜூலை 13-ஆம் தேதி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 74.
மறைந்த நகைச்சுவை ஆளுமை சார்லி சாப்ளினின் ஆறாவது மகள் ஜோசஃபின் சாப்ளின். நோபல் பரிசு வென்ற நாடக ஆசிரியர் யூஜின் ஓ’ நீல் - சார்லி சாப்ளின் தம்பதியினருக்கு 1949ஆம் ஆண்டு பிறந்தவர். 1952-ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் எழுதி இயக்கிய ‘லைம்லைட்’ படத்தின் குழந்தை நட்சத்திரமாக ஜோசஃபின் சாப்ளின் அறிமுகமானார். அதன் பிறகு ‘கவுண்டஸ் ஃப்ரம் ஹாங்காங்’ என்ற படத்தில் நடித்தார். இது தவிர ஏராளமான ஃப்ரெஞ்சு படங்களில் நடித்துள்ளார்.
பல வருடங்களாக பாரிஸில் வசித்து வந்த அவர், கிரேக்க தொழிலதிபரான நிக்கி சிஸ்டோவரிஸ் என்பவரை திருமணம் செய்திருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து, சில வருடங்களில் தொல்லியல் ஆய்வாளரான ஜீன் கிளாட் கார்டின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜோசஃபினுக்கு சார்லி, ஜூலியன், ஆர்தர் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 13-ஆம் தேதி ஜோசஃபின் சாப்ளின் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தின் தற்போது தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கும் பாரிஸிலேயே நடைபெற்றதாகவும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago