“படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளே இருக்காது” என ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் குறித்து இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய ‘மெமன்டோ’, ‘ தி ப்ரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டெர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. திரைக்கதை அமைப்பில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தவர் நோலன். கடைசியாக கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனெட்’ திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது நோலன் இயக்கியுள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ (‘Oppenheimer’) படம், இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரைப் பற்றி பேசுகிறது. இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். 'அயர்ன்மேன்' புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “படத்தில் ஒரு கிராஃபிக்ஸ் காட்சியும் இருக்காது. ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரின் அணுகுண்டு வெடிப்பு சோதனையை மீட்டுருவாக்கம் செய்த காட்சியிலும் கூட கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்படவில்லை” என இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago