சிலிர்க்க வைக்கும் ரயில் காட்சி - ‘மிஷன் இம்பாசிபிள்’ மேக்கிங் வீடியோவை பகிர்ந்த டாம் க்ரூஸ்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங்’ படத்தில் இடம்பெற்ற ரயில் ஆக்‌ஷன் காட்சியின் மேக்கிங் வீடியோவை டாம் க்ரூஸ் பகிர்ந்துள்ளார்.

ஹாலிவுட் ஆக்‌ஷன் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்களுக்கு எப்போதும் இடம் உண்டு. 1996 முதல் வெளியாகி ஆக்‌ஷன் ரசிகர்களை வியக்க வைக்கும் இதன் முந்தைய பாகங்கள் உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் அடுத்து வெளியாக உள்ள ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் 7-ம் பாகத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த பாகத்துக்கு ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெகனிங் (பாகம் 1)’ என பெயரிடப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் ஜூலை 12-ம் தேதியும், அடுத்த பாகம் அடுத்த ஆண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

மிஷன் இம்பாசிபிள் படங்களின் சிறப்பம்சமே அதன் வியக்க வைக்கும் ஸ்டன்ட் காட்சிகள்தான். ஒவ்வொரு படத்திலும் மறக்கவே முடியாத ஒரு நீளமான ஆக்‌ஷன் காட்சி இடம்பெறும். அந்த வகையில் இப்படத்தில் ரயிலில் நடக்கும் ஒரு ஆக்‌ஷன் காட்சி இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த ரயில் ஆக்‌ஷன் காட்சியின் மேக்கிங் வீடியோவை டாம் க்ரூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில், ‘இந்த ரயில் காட்சியை படமாக்கியது மிகவும் சிக்கலாக இருந்தது. ஆனால் அதற்கு கிடைத்த பலன் அந்த சிக்கல்களையெல்லாம் தகுதியானதாக ஆக்கிவிட்டது. இந்த காட்சி உயிர்பெறுவதை அனைவரும் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்