கருப்புத் தங்கத்துக்காக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் - ‘Killers of the Flower Moon’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியானார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ நடித்துள்ள படம் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’. 2017ஆம் ஆண்டு இதே பெயரில் டேவிட் கிரென் என்பவர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 1920களில் அமெரிக்காவின் ஓசேஜ் நேஷன் என்ற பழங்குடியின நிலத்தை அதன் எண்ணெய் வளத்துக்காக கைப்பற்றிய அமெரிக்கர்கள், அங்கு நிகழ்த்திய தொடர் கொலைகளைப் பற்றி இப்படம் பேசுகிறது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் ஆப்பிள் டிவியில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (ஜூலை 6) வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த தனது மனைவியிடம் நாயகன் லியானார்டோ டிகாப்ரியோ, “மிக அழகான தோல் நிறத்தை நீ கொண்டிருக்கிறாய்? அது என்ன நிறம்?" என்று கேட்கிறார். அதற்கு அவரது மனைவி, “என்னுடைய நிறம்” என்று பதிலளிப்பதோடு ‘A Tribe Called Red' என்ற அட்டகாசமான பின்னணி பாடலுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ஓசேஜ் நேஷன் பகுதியில் எண்ணெய் வளம் கொழிப்பதை அறிந்து கொள்ளும் அமெரிக்கர்கள் சிலர், அந்த ‘கருப்பு தங்கத்திலிருந்து’ கிடைக்கும் லாபத்தை பங்கிட்டுக் கொள்ள திட்டமிடுகிறார்கள். தங்களின் நோக்கத்துக்கு குறுக்கே நிற்கும் செவ்விந்தியர்களை தொடர்ந்து கொலை செய்கின்றனர். இந்த கொலைகளுக்குப் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை என்பது ட்ரெயலரிலேயே விரிவாக காட்டப்படுகிறது. இதைத் தாண்டி திரையில் நம்மை ஈர்க்கப் போவதுதான் ஸ்கார்செஸியின் மேஜிக்.

‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ ட்ரெய்லர்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்