நான் தன்பாலின உறவில் இருப்பவன்: நடிகர் கெவின் ஸ்பேஸி அறிவிப்பு

By ஆலன் ஸ்மித்தீ

நடிகர் கெவின் ஸ்பேஸி, தான் தன்பாலின உறவில் இருப்பவன் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

செவன், சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கெவின் ஸ்பேஸி. யூஷுவல் சஸ்பெக்ட்ஸ், அமெரிக்கன் பியூட்டி ஆகிய படங்களில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதுகளையும் வென்றவர்.

சமீபத்தில் ஹாலிவுட்டில் ஹார்வீ வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர் குறித்து எழுந்த பாலியல் சர்ச்சையைத் தொடர்ந்து, பல நடிகர் நடிகைகள், தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில், அந்தோணி ராப் என்ற நடிகர், 30 வருடங்களுக்கு முன்பு நடிகர் கெவின் ஸ்பேஸி, பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் எனத் தெரிவித்தார். மேலும் இன்று வரை அந்த நினைவுகள் தன்னை பாதித்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது நடிகர் கெவின் ஸ்பேஸி இது குறித்து பதிலளித்துள்ளார். அந்தோனி ராப்பிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல், தன்னை தன்பாலின உறவில் இருப்பவனாக வெளிப்படையாக அவர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

"அந்தோணி ராப் மீது ஒரு நடிகராக அதிக மரியாதை வைத்துள்ளேன். அவரது கதையைக் கேட்டு நான் திகிலடைந்துள்ளேன். உண்மையாக அந்த சந்திப்பு எனக்கு ஞாபகமில்லை. அது நடந்து எப்படியும் 30 வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆனால் அவர் சொன்னது போல நான் நடந்திருப்பேனேயானால், குடிபோதையில் என்னுடைய தவறான நடத்தைக்கு அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அது தொடர்பாக இவ்வளவு வருடங்களாக அவர் மனதில் வைத்திருந்த உணர்வுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கோள்கிறேன்.

இந்த சம்பவம், என் வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேச என்னை ஊக்குவித்துள்ளது. என்னைப் பற்றி பல கதைகள் உலாவுவது எனக்குத் தெரியும். அதில் சில என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் அதிக பாதுகாப்பு உணர்வுடன் இருந்ததால் உருவானவை. எனது வாழ்க்கையில், ஆண் பெண் என இரு பாலினருடனும் நான் உறவில் இருந்துள்ளேன் இது எனக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரியும். ஆண்களுடன் உறவில், காதலில் இருப்பதை நான் விரும்பியிருக்கிறேன். இப்போது நான் தன் பாலின உறவில் இருப்பவனாக வாழ முடிவெடுத்துள்ளேன். இதை நான் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் கையாள நினைக்கிறேன். அது என்னுடைய சொந்த நடத்தையை நான் பரிசோதனை செய்வதிலிருந்து தொடங்குகிறேன்".

இவ்வாறு கெவின் ஸ்பேஸி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்