‘டைட்டானிக்’ பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் 20 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்கிறார் நடிகை கேட் வின்ஸ்லெட். ‘அவதார்’ படங்களின் அடுத்த பாகங்களில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2009 ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்த ‘அவதார்’ திரைப்படம் ஹாலிவுட்டில் தொழில்நுட்ப ரீதியாகவும், உலகளவில் வசூல் ரீதியாகவும் புதிய புரட்சியையே ஏற்படுத்தியது. அவதார் படங்களின் வரிசை தொடரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த ஜேம்ஸ் கேமரூன், அதற்கான வேலைகளில் கடந்த 8 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
அவ்வப்போது அவதார் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதில் புதிய செய்தியாக, கேட் வின்ஸ்லெட் இந்தப் படங்களில் நடிக்கவிருப்பதை கேமரூன் உறுதி செய்துள்ளார்.
"எனது திரைத்துறை அனுபவத்தில் அதிக பலனளித்த படமான ‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு நானும் கேட் வின்ஸ்லெட்டும் அடுத்து ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் தற்போது ‘அவதார்’ படத்தின் ரோனல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த கதாபாத்திரத்துக்கு அவர் உயிர் அளிப்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்" என்று கேமரூன் கூறியுள்ளார்.
‘அவதார்’ படத்தின் 2ஆம் பாகம், டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகும் என்றும், 3ஆம் பாகம், டிசம்பர் 17, 2021 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 வருட இடைவெளிக்குப் பிறகு, 4ஆம் பாகம் டிசம்பர் 20, 2024ம் ஆண்டும், 5ஆம் பாகம் டிசம்பர் 19, 2025ஆம் ஆண்டும் வெளியாகும் எனத் தெரிகிறது.
கடந்த வாரம், 4 படங்களுக்கான படப்பிடிப்பையும் கேமரூன் தொடங்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ஸோயி ஸல்டானா, சாம் வொர்திங்க்டன், சிகோர்னி வீவர், ஸ்டீஃபன் லேங் உள்ளிட்டோர் அடுத்த பாகங்களிலும் நடிக்கவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
37 secs ago
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago