‘தினமும் ஒரு பேரிச்சம்பழம் மட்டுமே’ - சாவர்க்கர் ஆக நடிக்க 26 கிலோ எடையை குறைத்த ரன்தீப் ஹூடா

By செய்திப்பிரிவு

மும்பை: சாவர்க்கர் கதாபாத்திரத்துக்காக நடிகர் ரன்தீப் ஹூடா சுமார் 26 கிலோ எடையை குறைத்ததாக ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் கூறியுள்ளார்.

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. ரன்தீப் ஹூடா இயக்கி நடிக்கும் இப்படத்தை திரைக்கதையை ரன்தீப் உடன் உட்கார்ஷ் நைதானி என்பவரும் எழுதியுள்ளார். சாவர்க்கரின் 140-வது பிறந்தநாளான நேற்று இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தில் சாவர்க்கர் கதாபாத்திரத்தில் நடிக்க ரன்தீப் ஹூடா 26 கிலோ எடையை குறைத்ததாக தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “இந்தக் கதாபாத்திரத்துக்காக ரன்தீப் ஹூடா எல்லா வகையான கடின முயற்சிகளையும் மேற்கொண்டார். கடைசி வரை அந்த கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் மூழ்கியிருந்தார். படப்பிடிப்பு முடியும் வரை நான்கு மாத காலம் ஒரே ஒரு பேரிச்சம்பழமும், ஒரு கிளாஸ் பாலும் மட்டுமே உட்கொண்டு வந்தார். இதன் மூலம் 26 கிலோ எடையை குறைத்தார். சாவர்க்கரின் தோற்றம் வரவேண்டும் என்பதற்காக பாதி தலைக்கு மொட்டையடித்தார்” என்று ஆனந்த் பண்டிட் கூறினார்.

'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தின் டீசர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்