“பாசாங்கு, அற்பத்தனம்...” - கமல்ஹாசனுக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் பதிலடி

By செய்திப்பிரிவு

மும்பை: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார்.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தென்னிந்தியாவில் சோபிக்காத இப்படம், இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடியை கடந்து வசூலித்து வருகிறது.

சமீபத்தில் இப்படம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமனே லோகோவுக்கு பக்கத்தில் ‘இது உண்மைக் கதை’ என எழுதினால் மட்டும் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல” என்று விமர்சித்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்துக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் பதிலளித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்வதில்லை. ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று, அப்படி செய்வதை நான் நிறுத்திவிட்டேன். காரணம் ஆரம்பத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பிரச்சாரப் படம் என்று கூறியவர்கள் படம் பார்த்த பிறகு தங்கள் மனதை மாற்றிக் கொண்டனர். படம் பார்க்காதவர்கள்தான் அதனை விமர்சித்து வருகின்றனர். படத்தை பார்க்காமலேயே அதனை பிரச்சாரப் படம் என்று விமர்சித்து வருகின்றனர்.

நம் நாட்டில் நிறைய முட்டாள்தனமான கற்பிதங்கள் உள்ளன. பாஜகவினருக்கு படம் பிடிக்கிறது என்பாதாலேயே இது அவர்களுடைய படம் என்று அர்த்தம் அல்ல. உலகம் முழுவதும் 37 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்தப் படம் பிடித்துள்ளது. அவர்கள் விமர்சிக்க வேண்டுமென்றால், அவர்கள் என்னிடம் நேரடியாக போன் செய்து அதுகுறித்து விவாதிக்கிறார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பாசாங்கு, அற்பத்தனம் என்பதைத் தவிர வேறு என்ன வார்த்தைகளைச் சொல்வது? விமர்சிப்பவர்களுக்கு நான் விளக்கம் கொடுப்பதில்லை” என்று சுதிப்டோ சென் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்