பிரபல இந்தி நடிகர் சல்மான் கான். இவர் இப்போது ‘டைகர் 3’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில், நேற்று முன் தினம் அவருக்கு காயம் ஏற்பட்டது.
அதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் மும்பையில் 19 மாடி கொண்ட நட்சத்திர ஓட்டல் ஒன்றைக் கட்ட இருக்கிறார். பாந்த்ரா பகுதியில் நடிகர் ஆமீர்கானின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த ஓட்டல் கட்டப்பட இருக்கிறது.
3 அடுக்கு பேஸ்மென்ட்டும் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் கஃபே மற்றும் ரெஸ்டாரன்ட்டும் உருவாக இருக்கிறது. மூன்றாவது தளத்தில் ஜிம், நீச்சல் குளமும், நான்காவது தளம் சர்வீஸ் தளமாகவும் ஐந்து மற்றும் ஆறாவது தளம் கன்வென்சன் மையமாகவும் பிறகு 19 வது தளம் வரை அறைகளும் கட்டப்பட இருக்கின்றன.
சல்மான் கான் குடும்பத்தினர் முதலில் இந்த இடத்தில் குடியிருப்பு கட்ட முடிவு செய்திருந்ததாகவும் பின்னர் அந்த திட்டத்தை மாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago