கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராயின் வித்தியாசமான உடை

By செய்திப்பிரிவு

பிரான்ஸில், 76-வது கேன்ஸ் திரைப்பட விழா 17-ம் தேதி தொடங்கியது. 27-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் சர்வதேச திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் சிறப்பு சிவப்பு கம்பள வரவேற்பில் நடப்பதைபலர் கவுரவமாக கருதுகின்றனர்.இந்தியாவிலிருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆஸ்கர் விருதுபெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர் ஆவண பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா, நடிகைகள் மனுஷி சில்லார், சாரா அலிகான், மிருணாள் தாக்கூர், எமி ஜாக்சன் உட்படபலர் சிவப்பு கம்பள வரவேற்பைப் பெற்றனர்.

இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமானஆடையில் வந்து அசத்துவார். இந்த முறையும் வித்தியாசமான உடையில் அவர் பங்கேற்றார்.

அவர் கறுப்பு மற்றும் சில்வரால் ஆன கவுனை அணிந்திருந்தார். அவர் உடையை பலர் பாராட்டியுள்ளனர். அவர் தலையில் முக்காடு போல் அணிந்திருந்ததை, சமூக வலைதளங்களில் சிலர் கிண்டலடித்துள்ளனர். அவர் என்ன உடை அணிந்தாலும் அழகாகவே இருப்பார், பிறகு எதற்கு இந்தவித்தியாச முயற்சி எனகூறி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்