மும்பை: ‘ஜவான்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தி படத்தை அட்லி இயக்கவுள்ளார். இதில் வருண் தவான் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்துக்குப் பிறகு வருண் தவான் நடிக்கும் ஒரு படத்தை அட்லி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கபீர் சிங்’, ‘பூல் புலைய்யா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த முராத் கெடானி இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் பெரும் பொருட்செலவில் ஆக்சன் எண்டர்டெய்னர் படமாக உருவாக உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago