படப்பிடிப்பில் விபத்து: நடிகை இஷா தல்வார் காயம்

By செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகை இஷா தல்வார். இவர் தமிழில் பத்ரி இயக்கிய ‘தில்லு முல்லு’, மித்ரன் ஜவஹர் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ஆர்ஜே.பாலாஜி நடித்த ‘ரன் பேபி ரன்’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இப்போது, ‘சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் நடித்தபோது தனது கண்ணில் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இதன் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பு உப்பளத்தில் நடந்தது. நள்ளிரவு என்பதால் இருட்டாக இருந்தது. வெடிபொருள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது திடீரென்று வெடித்ததில் எனது இடது கண்ணில் பலத்தக் காயம் ஏற்பட்டது. கண்ணைத் திறக்க முடியவில்லை. உடனடியாக 2 மருத்துவர்களைச்சந்தித்து ஆலோசனை பெற்றேன். கண்ணை மூன்று நாட்கள் திறக்கக் கூடாது என்றார்கள். அந்த நாட்களில் இருளில் இருந்தேன். காயம் சரியான பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்