அஜய் தேவ்கனுடன் இணைகிறார் மாதவன்

By செய்திப்பிரிவு

நடிகர் மாதவன், ‘ராக்கெட்ரி’ படத்துக்குப் பிறகு, மித்ரன் ஜவஹர் இயக்கும் படம், சஷிகாந்த் இயக்கும் ‘தி டெஸ்ட்’, சங்கரன் நாயர் பயோபிக் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் அஜய் தேவ்கனுடன் இணைந்து இந்தியில் நடிக்கிறார்.

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான இதை, விகாஸ் பால் இயக்குகிறார். இவர், ‘குயின்’, ‘சூப்பர் 30’, ‘குட் பை’ உட்பட பல படங்களை இயக்கியவர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE