மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு லண்டனில் படிக்கும் மருத்துவ மாணவர் ஒருவர் இமெயிலில் மிரட்டல் விடுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் மருத்துவப் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார் என்றும், தற்போது அவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நடிகர் சல்மான் கானுக்கு அந்த மாணவர் தொடர்ந்து மிரட்டல் இமெயில்களை அனுப்பி வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். தற்போது அந்த மாணவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டின் இறுதியில் அவரது மருத்துவ படிப்பு முடிவடைவதால் அவர் இந்தியா திரும்பக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவிலிருக்கும் கோல்டி பிராரை நடிகர் சல்மான் கான் சந்தித்து, பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு கடந்த மார்ச் மாதம் ஒரு மிரட்டல் இமெயில் சல்மான் கானுக்கு வந்தது. அதே போல ‘ராக்கி பாய்’ என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் ரின் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சல்மான் கானை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக மைனர் சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago