‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு எதிராக அவதூறு: மம்தா பானர்ஜிக்கு விவேக் அக்னிஹோத்ரி நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு மேற்குவங்கத்தில் தடைவிதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒரு தரப்பினரை இழிவுப்படுத்தியது. தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ திரிக்கப்பட்ட கதையாக வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் பாஜகதான் நிதியுதவி செய்துள்ளது” என்றார்.

இந்நிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து அவதூறாக பேசியதாக படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நோட்டீஸில் விவேக் அக்னிஹோத்ரி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்