அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செப்.7-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் ரூ.1,000 கோடியை வசூலித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் ‘ஜவான்’. அட்லீ இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ இன்ஸ்பிரேஷனில் இந்தப் படம் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பட வேலைகள் முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதன்படி படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘டங்கி’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்