பிரபல இந்தி நடிகை அமீஷா படேல். இவர் தமிழில் 2003-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘புதிய கீதை’படத்தில் நடித்துள்ளார். இந்தியில் தொடர்ந்து நடித்த அவர் சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். கடந்த 2013ம் ஆண்டு அமீஷா படேல் தன் பார்ட்னர் குருணாலுடன் இணைந்து ‘தேசி மேஜிக்’ என்ற படத்தைத் தயாரித்தார்.
இதற்காக ராஞ்சியைச் சேர்ந்த அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடனாகப் பெற்றார். ஆனால், படத்தை வெளியிடவில்லை.
பணத்தைக் கொடுத்த அஜய்குமார் திருப்பி கேட்டிருந்தார். அமீஷா பட்டேல் வட்டியுடன் சேர்த்து ரூ.3 கோடிக்கான காசோலையை கடந்த 2018ம் ஆண்டு கொடுத்திருந்தார். அது, வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து அமீஷா பட்டேல், குருணால் மீது அஜய்குமார் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு சில வருடங்களாக நடந்து வருகிறது. இதற்காக சில முறை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் அமீஷா கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ராஞ்சி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago