‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக் இந்தாண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. நடிகர் சூர்யாவுக்கு அவருடைய சினிமா பயணத்தில் முக்கியமான ஒரு படமாக இது அமைந்தது. அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கரோனா முடக்கம் காரணமாக படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்காரா இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். உடன் நடிகர்கள் ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
» எழுச்சிமிகு வசனங்கள், காதல்... - ‘ஆகஸ்ட் 16, 1947’ ட்ரெய்லர் எப்படி?
» நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா காலமானார்
சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago