ஸாய்ரா வாஸிமின் பணி நேர்த்தி; ஆச்சரியப்பட்ட ஆமிர்கான்

பாபாலிவுட்டின் நேர்த்தியான நடிகர் என்று புகழப்படும் நடிகர் ஆமிர்கான், இளம் நடிகை ஸாய்ரா வாசிம் நடிப்பில் கொண்டு வரும் நேர்த்தியைக் கண்டு ஆச்சரியத்திலுள்ளார்.

ஸாய்ரா வாசிம் நடிப்பில், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்ற படத்தைத் தயாரித்துள்ள ஆமிர்கான், படத்தில் ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து ஆமிர்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸாய்ராவுக்கு இசை சம்பந்தம் கிடையாது. தங்கல் படப்பிடிப்பின் போது அவருக்கு மல்யுத்தமும் தெரியாது. ஆனால் தங்கலுக்காகவும், சீக்ரெட் சூப்பர்ஸ்டாருக்காவும் அவர் பயிற்சி பெற்றார். கிட்டார் இசைக்கக் கற்றுக்கொண்டார். இது பெரிய விஷயம்.

ஒரு நடிகராக, இசைக் கருவியை வாசிக்கும் காட்சிகளில் அதை சரியாக வாசிக்க முயற்சிப்போம். ஆனால் ஸாய்ரா ஒருபடி அதிகமாக சென்றுள்ளார். அதிக நேரம் செலவழித்து எப்படி பாட வேண்டும் எனக் கற்றுக் கொண்டார். மேக்னா மிஷ்ராவுடன் பயிற்சி மேற்கொண்டார். அவர் வாசிப்பதாக இருக்கும் பாடல் காட்சிகளில் எல்லாம் உண்மையாகவே கிட்டார் வாசித்தார். அதற்காகக் கற்றுக்கொண்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது அடையாளத்தை ரகசியமாக வைத்துக் கொண்டு, தனது பெற்றோருக்கு தெரியாமல், எப்படி ஒரு பதின்ம வயதுப் பெண்  பாடகியாகும் கனவை நிறைவேற்றிக் கொள்கிறாள் என்பதே சீக்ரட் சூப்பர்ஸ்டார் படத்தின் கதை. படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE