‘கைதி’ இந்தி ரீமேக்கா இது? - வெளியானது ‘போலா’ ட்ரெய்லர்!

By செய்திப்பிரிவு

மும்பை: லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. தற்போது அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அவரே இந்தப் படத்தை இயக்கியும் உள்ளார்.

இந்தப் படம் 3டி-யில் உருவாகி உள்ளது. வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது ரீமேக் என்றாலும் கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது போல உள்ளது. பாடல், ஹீரோயின் என மசாலா சினிமாவின் வாசம் தூக்கலாக இருப்பது போல ட்ரெய்லர் உள்ளது.

சுமார் 2.33 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர். நடிகை அமலா பால், அஜய் தேவ்கனின் மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். ‘நஸர் லக ஜாயேகி’ என பாடலும் அவர்கள் இருவருக்கும் இடையே வரும் எனத் தெரிகிறது. இந்தப் பாடலின் வீடியோ கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இது தவிர குத்துப் பாடல் ஒன்றும் படத்தில் இருப்பது போல தெரிகிறது. இது ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது. தபு, நரேன் நடித்த போலீஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார். அசல் படத்தின் கதை உடன் ஒப்பிடும்போது போலா ட்ரெய்லர் முற்றிலும் அந்நியமாக நிற்கிறது. ட்ரெய்லர் லிங்க்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்