மும்பை: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூலை கடந்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் பாலிவுட் திரையுலகில் வெளியான பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை ஈட்டாத நிலையில் பதான் அதனை தவிடுபொடியாக்கி உள்ளது.
படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வெற்றி பாலிவுட் பாட்ஷா என அறியப்படும் ஷாருக்கான் கொடுத்துள்ள கம்பேக் என சொல்லப்படுகிறது. உள்நாட்டில் சுமார் 623 கோடி ரூபாயும், வெளிநாட்டில் சுமார் 377 கோடி ரூபாய் என மொத்தம் 1000 கோடி ரூபாய் வசூலை பதான் எட்டியுள்ளது.
மேலும், 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த ஐந்தாவது திரைப்படமாக இது இணைந்துள்ளது. இதற்கு முன்னர் தங்கல் (ரூ.1914 கோடி), பாகுபலி 2 (ரூ.1747 கோடி), கேஜிஎப் 2 (ரூ.1188 கோடி) மற்றும் ஆர்ஆர்ஆர் (ரூ.1174 கோடி) வசூலை ஈட்டியுள்ளன.
ஷாருக்கான் உடன் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி 25-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்து வெற்றி பெற்றது திரைப்படம்.
ஆதித்ய சோப்ரா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். விஷால் - சேகர் இணைந்து படத்திற்கான இசையை அமைத்தனர். படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியானது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago