கன்ஸ் அண்ட் தைஸ் இணையத் தொடரை இயக்குவது ஏன்? - ராம் கோபால் வர்மா விளக்கம்

'கன்ஸ் அண்ட் தைஸ்' இணையத் தொடரை இயக்குவது ஏன் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா விளக்கமளித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா, 'கன்ஸ் அண்ட் தைஸ்' என்ற இணையத் தொடரை இயக்கியுள்ளார். விரைவில் ஒளிபரப்பாகவுள்ள அத்தொடரின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இணையத் தொடரை இயக்குவது ஏன் என்று விளக்கமளித்துள்ளார் ராம் கோபால் வர்மா. அதில் கூறியிருப்பதாவது:

"டிஜிட்டல் உலகத்துக்கு நான் வரும் ஒரே நோக்கம், சினிமாவில் என்னால் சொல்ல முடியாத கதைகளை சொல்ல முடியும் என்பதால் தான்.

எனது முதல் படைப்பு, கன்ஸ் அண்ட் தைஸ் (GUNS and THIGHS) 10 பகுதிகள் கொண்ட தொடர். 4 சீஸன்கள் எடுக்கவுள்ளேன். அதிகாரமும், காமமும், லட்சியம், அகந்தை, ஆசை ஆகியவை கொண்ட அரசியலை எப்படி பாதிக்கிறது என்பதாலேயே இந்த தலைப்பு.

பல வருடங்களாக, முன்னாள் கேங்க்ஸ்டர்க்கள், என்கவுண்ட்டர் செய்த போலீஸ், நிழல் உலக தொடர்புக்கான தரகர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரை சந்தித்து சேகரித்த தகவல்களின் அடிப்படியிலேயே கன்ஸ் அண்ட் தைஸ் தொடரின் மொத்த கதையும் உருவாகியுள்ளது.

இதற்கு முன்னரே சத்யா, கம்பனி ஆகிய படங்களில் நான் இதை பேசி விட்டனே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அவையும் உண்மைகளே. அந்தப் படங்களில் நான் நிழலுலகில் நடப்பவற்றை நான் மேலோட்டமாகத் தொட்டிருந்தேன். அதற்கு தெளிவற்ற தகவல்களும், சில கட்டுப்பாடுகளும் காரணம். இப்போது தொடரில் இருப்பதை அப்படியே சொல்ல முடிவு செய்துள்ளேன்.

இந்தத் தொடர் பல்வேறு நாடுகளின் நிழலுலகைப் போல இங்கிருப்பவற்றை சர்வதேச ரசிகர்களுக்கு காட்டத்தான். அன்றைய காலகட்டத்தில் பிறக்காத, இதுபற்றி தெரியவராதவர்களுக்கும் சேர்த்துதான் இந்தத் தொடர். அப்போது மும்பை என்ன மாதிரியான குழப்பத்தில் வாழ்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தாங்கள் வாழும் நிலத்தின் வரலாறை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தொடர், அந்த முக்கிய காலகட்டத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு, அதை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் என நம்புகிறேன்.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான மும்பையில் 20 மில்லியன் மக்கள் இருக்கின்றனர். இது இந்தியாவின் பொருளாதார தலைநகரும் கூட. ஆனால் அதன் மையத்தில், இதயத்தை நொறுக்கும் வறுமையின் காட்சிகளைத் தான் பார்க்க முடிகிறது.

உலகின் மிகப்பெரிய சேரி தாராவி, நடைபாதையில் வாழ்பவர்கள், குண்டும் குழியுமான சாலைகள், எப்போதும் விழுந்துவிடக்கூடும் என்பது போன்ற கட்டிடங்கள் எலலம் மும்பையின் ஒட்டுமொத்த வறுமையின் சிறிய துளியே.

பணக்கார நிறுவனங்கள், போலியான பாலிவுட் மக்கள் மற்றும் வன்முறை நிறைந்த நிழலுலக கூட்டம், என இவர்களின் பொலிவு மட்டுமே, அப்போது இருளில் மூழ்கியிருந்த மும்பையின் சிறிய ஒளிக்கீற்றாக இருந்தது.

அப்படியான சூழல் நிலையில்லாத, ஆனால் வலிமையான ஒரு குற்ற கலாச்சாரத்துக்கு வழிவகுத்திருக்கும் என்பதில் எந்த அதிசயமும் இல்லை. அந்த குழப்பமான காலத்தில், செல்வத்தில் கொழித்த சிலரும், லட்சக்கணக்கான ஏழை மக்களும் அருகருகில் வாழ்ந்தனர். அதற்கு கவர்ச்சிகரமான சினிமா தந்த போலியான நம்பிக்கைகளும் ஒரு காரணம். தொடர்ந்து குற்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் போனது, எதிர்பார்த்தது போல், பல கொள்ளைக் கூட்டங்களும் மும்பையில் செழித்தன. 2000களின் ஆரம்பம் வரை அவர்கள் ஆண்டனர்.

மும்பையை ஆட்சி செய்த மிக சக்தியான கூட்டம் டி கம்பனி. அதன் தலைவர் தாவூத் இப்ராஹிமின் பெயரால் வந்தது ’டி’. அவரும், அவரது கூட்டளி சோட்டா ராஜனும் இந்த நகரத்தை நீண்ட காலம் தங்கள் பிடியில் வைத்திருந்தனர்.

ஆனால் சில சம்பவங்களின் தொடர்ச்சியாக இருவருகும் நடுவில் விரிசல் விழுந்தது. அது டி கம்பனியை உடைத்தது. இந்த சந்தர்பத்துக்காக காத்துக்கொண்டிருந்த பல கூட்டங்கள் அப்போது முன்னிலை பெற நினைத்தது.

இதனால் பணம் பறித்தால், காசுக்காக கொலை செய்தல் என பல குற்றச் செய்ல்கள் பல மடங்கு பெருகின. கேங்க் வார்ஸ் என சொல்லப்பட்டும் குற்றவாளிக் குழுக்கள் இடையே மோதல் வெடித்தது. அது அடியாட்களின் தேவையை அதிகரித்தது. நிழலுலகில் பலரும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து கொலைகாரர்களை வேலைக்கு எடுக்க ஆரம்பித்தனர். இது அவர்களுக்கு பெரிய வியாபாரம் போலவே அமைந்தது.

இந்த காலகட்டத்தில் தான், இதற்குமுன் இருந்திராத அளவுக்கு மாஃபியா, திரையுலகம், காவல்துறை, தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே ஒரு கூட்டு உருவானது. கன்ஸ் அண்ட் தைஸ், நீண்ட காலமாக மறைந்துள்ள அந்த உண்மையை வெளிக்கொண்டு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE