“நான் என்னதான் செய்வேன்? நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு என்னதான் பிரச்சினை?” என்று ரசிகர்கள் - நெட்டிசன்களின் கருத்துகள் குறித்து மீது நடிகை ராஷ்மிகா மந்தனா கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய்யுடன் அவர் இணைந்து நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலிவுட்டிலும் அவர் பல படங்கள் நடித்து வருகிறார். பாலிவுட்டில் சமீபத்தில் இவரது நடிப்பில் ‘மிஷன் மஞ்சு’ திரைப்படம் வெளியானது. இதையொட்டி அவர் அளித்த பேட்டியில் ஒன்றில், கடந்த ஒருமாதமாகவே தான் பல்வேறு ட்ரால்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். தன் மீதான ரசிகர்களின் கேலிகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டியளித்திருக்கும் ராஷ்மிகா, “நான் உடற்பயிற்சி செய்தால் பார்ப்பதற்கு பையன் போல இருப்பதாகக் கூறுகிறார்கள். இல்லை எனில் பருமனாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். நான் என்னதான் செய்வேன்? நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு என்னதான் பிரச்சினை? தெளிவாக சொல்லிவிடுங்கள். உங்களுக்கு என்னிடம் பிரச்சினை இருந்தால் என்ன பிரச்சினை என சொல்லிவிடுங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மனதளவில் பாதித்துவிடுகின்றன. அவை என்னைக் காயப்படுத்துகின்றன. இந்த சினிமாத் துறையில் ஐந்தாறு வருடங்களாக இருக்கிறேன். சமீபமாக எனக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பி வருகின்றனர். அது ஏன் என எனக்கு புரியவில்லை” என்று கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago