மும்பை: ’பதான்’ படத்தின் தமிழ்ப் பதிப்பின் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ’பதான்’ படத்தின் ஹிந்தி ட்ரெய்லரை நடிகர் ஷாருக்கான் வெளியிட, தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டு தனது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ’பதான்’ படத்தின் தெலுங்கு பதிப்பை நடிகர் ராம்சரண் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் ’பதான்’ படத்தின் தமிழ் பதிப்பின் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக்க நன்றி நண்பா. இதனால்தான் நீங்கள் தளபதி. கூடிய விரைவில் அருமையான விருந்தில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
» “மத்திய அரசின் பக்கம் நிற்க வேண்டும்” - குடிமைப்பணி தேர்வர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago