ஷாருக்கானின் ‘பதான்’ ட்ரெய்லர் நாளை வெளியீடு 

By செய்திப்பிரிவு

ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், நாளை (ஜனவரி 10) காலை 11 மணி அளவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ''பேஷரம் ரங்'' பாடலில் ஷாருக்கானுடன் காவி உடை அணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடும் காட்சிகளுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அந்த நடனக் காட்சிகள் இருப்பதால், பாஜக ஆளும் மாநிலங்களில் ‘பதான்’ படத்தை திரையிட விடமாட்டோம் என அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்சாரிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, சில திருத்தங்கள் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்