ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உட்பட பலர் நடித்துள்ள இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படம் ஜன. 25-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள,‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சர்ச்சையானது.
தீபிகா படுகோன் காவி நிற பிகினி ஆடையும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்து, படத்தில் ஆடுகின்றனர். இதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, ‘காவி நிறம் வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழுக்காக, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, “படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் உள்ளிட்ட பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்களை செய்து, திருத்தப்பட்ட பதிப்பை ரிலீஸுக்கு முன் சமர்ப்பிக்கும்படி படக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago