இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், 2020-ம் ஆண்டு, ஜூன் 14-ல் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், தற்கொலை என கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மும்பை போலீஸார், அமலாக்கத்துறை, சிபிஐ, போதை பொருள் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு துறையினர் விசாரணை நடத்தினர். இறுதியில் சுஷாந்தின் மரணம் தற்கொலைதான் என வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், சுஷாந்தின் உடலை, கூப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த குழுவில் இடம்பெற்ற ரூப்குமார் ஷா என்பவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மாதம் ஓய்வு பெற்ற இவர், “சுஷாந்த் சிங்கின் கழுத்துப் பகுதியில் 3 காயங்கள் தென்பட்டன. அதனால், இது தற்கொலை அல்ல என்று உணர்ந்தேன். அவர் உடலில் மேலும் சில காயங்கள் எலும்பு முறிவு போல தெரிந்தன.
இதுபற்றி மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர், அதுபற்றி பிறகு பேசலாம் என்றார். பிரேத பரிசோதனையை விரைவாக முடித்து, உடலை போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்கள் உத்தரவுபடி செய்தோம்” என்று கூறியுள்ளார். இது இந்தி சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago